மிஷ்கினுடைய டைட்டில்தான் Kiss! கேட்டதும் அவருடைய ரியாக்ஷன்.. கவின் பகிர்ந்த தகவல்

kavin
Kavin: தமிழ் சினிமாவில் ஒரு வளரும் இளம் நடிகராக இருப்பவர் நடிகர் கவின். சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கவின் அதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி போன்ற மக்களால் ரசிக்கப்பட்ட தொடர்களில் லீடு ரோலில் நடித்து மிகப்பெரிய இடத்தை பெற்றார். அதன் பிறகு படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவருக்கும் லாஸ்லியாவுக்கும் இடையேயான காதல் என ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் ரீச் ஆனார் கவின். அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அவருக்கு லிப்ட், டாடா என தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவர் நடித்த முதல் இரண்டு படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் கவின்.
ஆனால் அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான பிளடி பர்கர் திரைப்படம் ரசிகர்களை எதிர்பார்த்த அளவு ஈர்க்கவில்லை. தற்போது கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் கவின். இந்த படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கி வருகிறார் .படத்தின் டீசர் கடந்த காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் காதலர் தினத்தை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனாக கவின் நடித்திருக்கிறார் .
ஆனால் டீசரை பார்க்கும் பொழுது அவருக்கு கடந்த கால வாழ்க்கை ஒன்று இருக்கிறது. ஹீரோயின் உன்னுடைய முதல் கிஸ் அனுபவம் பற்றி கூறு எனக் கேட்டதும் உடனே கவின் அவருடைய கடந்த கால வாழ்க்கையை நினைவுகூர்ந்து பார்க்கிறார். அதனால் அவருடைய கடந்த கால வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்தது என்பது மாதிரியான ஒரு ஆர்வத்தை நம்மிடையே தூண்டுகிறது.

இந்த படத்தை பற்றி சமீபத்தில் படக்குழு ஒரு பேட்டியில் கூறும்பொழுது இந்த படத்தின் டைட்டில் கிஸ் முதலில் மிஷ்கினிடம் இருந்தது. சதீஷ் தான் மிஷ்கினிடம் போய் இந்த டைட்டில் வேணும் என கேட்டார். உடனே மிஷ்கின் இது என்னடா டைட்டில்? இதை வைத்து என்ன செய்யப் போறீங்க என்று கேட்டு அதன் பிறகு அவர் கொடுக்க சம்மதித்தார் மிஷ்கின். படத்தின் பூஜை சமயத்தில் கூட மிஷ்கின் வந்து எங்களை ஆசீர்வதித்தார் என கவின் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.