Connect with us

Cinema News

இப்படி புஸ் ஆகிடுச்சே!.. முதல் வாரத்திலேயே முக்கிய கவினின் ஸ்டார்!.. மொத்த வசூல் இவ்வளவு தானா?..

கோலிவுட்டே கவினின் ஸ்டார் படத்தை மலை போல நம்பி இருந்த நிலையில், முதல் நாளிலேயே ஸ்டார் படத்தின் வசூல் டல் அடித்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் அதிகரிக்கும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள் காரணமாக ரசிகர்கள் கூட்டம் கவினின் ஸ்டார் படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை.

கடந்த வாரம் வெளியான சுந்தர் சியின் அரண்மனை 4 திரைப்படம் இந்த வாரமும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படத்தும் மக்களை தியேட்டரில் அதிகம் எண்டர்டெயின் செய்து வரும் நிலையில், அந்த படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். 50 கோடி வசூலை தாண்டி 60 கோடி வசூலை நோக்கி அந்த படம் நகர்ந்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நயன்தாராவுக்கு தலையில் இன்னாம்மா அடி விழுது!.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!.. செம வீடியோ!..

ஆனால், கவின் நடிப்பில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ஸ்டார் திரைப்படம் முதல் நாளில் 2.8 கோடி வசூல் செய்த நிலையில், சனிக்கிழமை 4 கோடி ரூபாய் வசூல் செய்தது ஞாயிற்றுக்கிழமை இன்று 4 கோடி ரூபாய்க்கும் சற்று குறைவாக 3.8 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக இதுவரை தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 10.6 கோடி வசூலை ஸ்டார் திரைப்படம் பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

ஸ்டார் படத்தின் பட்ஜெட் 12 கோடி ரூபாய் என்று சொல்லப்படும் நிலையில், படம் லாபகரமான படமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாட்டிலைட் மற்றும் ஓடிடி விற்பனைகள் உள்ளநிலையில் போட்ட முதலுக்கு எந்த ஊரு சேதாரமும் ஆகாது என்கின்றனர்.

இதையும் படிங்க: சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழித்த வசனகர்த்தா… நடந்தது இதுதான்!..

ஆனால், தமிழ் சினிமா எதிர்பார்த்த மிகப்பெரிய வெற்றி படமாக ஸ்டார் திரைப்படம் மாறாதது பெரும் ஏமாற்றி அளித்துள்ளது. ஒட்டுமொத்தமாகவே ஸ்டார் திரைப்படம் 20 கோடி வசூலை என்பதே கேள்விக்குறியாக உள்ளது. மலையாளத்தில் 10 முதல் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் இந்த ஆண்டு 100 கோடி முதல் 200 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், தமிழில் இன்னமும் அதுபோல ஒரு படமும் வெளியாகவில்லை என்பதுதான் உண்மை.

 

 

google news
Continue Reading

More in Cinema News

To Top