ஓடிடியில் ஒடைஞ்சு போன கவின் இமேஜ்!.. நெல்சன் கழுத்துல தொங்குது பெரிய கத்தி!.. என்ன பண்ண போறாரோ?..

இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், லொள்ளு சபா மாறன், காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் மே 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான ஸ்டார் திரைப்படம் கடந்த வாரம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

தியேட்டரில் வெளியான ஸ்டார் திரைப்படம் 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த படம் எப்படி ஹிட் அடித்தது என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இயக்குனரின் பிடிவாதம்… கேரவன் இல்லாமல் உடை மாற்றிய நயன்தாரா… நடந்தது இதுதான்..!

சாதாரண குறும்படம் போலவே இந்த படம் உள்ளதாகவும் கவினின் நடிப்பை தவிர படமாக எந்த ஒரு தாக்கத்தையும் இந்த படம் கொடுக்கவில்லை என்றும் ஒரு காட்சி கூட புதிய படத்தில் பார்த்தது போல இல்லை. எல்லாமே மொக்கை இந்த படத்தை ஓவர்ரேட்டடாக கொண்டாடி இருக்காங்களே ஏன்? என்கிற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

ஸ்டார் படத்தின் பெரும் பின்னடைவு திடீரென அதிகமான சம்பளத்தை ஏற்றிய கவினுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. அவரது அடுத்தடுத்த படங்களின் பிசினஸ் இதனால் பாதிக்கும் என்கின்றனர்.

இதையும் படிங்க: பிரச்சனை சிம்பு இல்ல.. அவங்க அப்பா அம்மா தான்! மனம் திறந்த இயக்குனர்

மேலும், கவிதை வைத்து அடுத்ததாக படத்தை தயாரிக்கும் இயக்குனர் நெல்சனின் நிலைமை தான் ரொம்பவே மோசம் என்றும் பிளடி பெக்கர் திரைப்படத்தின் புரமோஷனில் ரெடின் கிங்ஸ்லி சொன்னது போலவே அந்த பிச்சைக்கார கெட்டப் நெல்சனுக்கு தேவைப்படுமோ? என கலாய்த்து வருகின்றனர்.

ஜெயிலர் படத்தின் வெற்றியால் கிடைத்த காசை வைத்து கவினை நம்பி தயாரிப்பாளராக நெல்சன் மாறியுள்ள நிலையில், நெல்சனுக்கு பிளடி பெக்கர் திரைப்படம் லாபத்தை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கவின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ், ஆண்ட்ரியாவுடன் ஒரு படம், நயன்தாராவுடன் ஒரு படம் எல்லாம் என்ன ஆகுமோ? என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. கவினுக்கு 5 கோடி சம்பளம் எல்லாம் இப்ப ரொம்ப ஓவர் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: விஜயின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவது இவரா..? நம்பவே முடியலயே… காண்பது கனவா இல்லை நனவா..?!

 

Related Articles

Next Story