எதோ பிளானோட தான் வந்திருக்கார் போல.! கவினை கண்டு மிரளும் விஜய் ரசிகர்கள்.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலமாகி, அடுத்து மீண்டும் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் அனைவரும் அறியப்பட்ட நடிகராகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளர் கவின்.
தனக்கு கிடைத்த பெயரை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டு தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகர் கவின். ஏற்கனவே அவர் நடிப்பில் உருவான லிப்ட் திரைப்படம் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் ஹீரோயினாக தளபதி விஜயின் பிகில் படத்தில் நடித்திருந்த அமிர்தா ஐயர் நாயகியாக நடித்திருந்தார்.
அதற்கடுத்ததாக ஆகா OTT தளத்திற்காக எடுக்கப்பட்ட வெப்சீரிஸான ஆகாஷ்வாணி எனும் வெப் சீரிஸில் நடித்தார். அந்த சீரிஸில் அவருக்கு ஹீரோயினாக பிகில் படத்தில் நடித்திருந்த ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார்.
இதையும் படியுங்களேன் - ட்ரைலரில் எதிர்பார்ப்பை எகிற வைத்து ரசிகர்களை கதற வைத்த திரைப்படங்கள்.! லிஸ்ட்ல சிக்காத ஹீரோவே இல்ல...
தற்போது கவின் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார். கணேஷ் கே.பாபு எனும் புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் அவருக்கு ஹீரோயினாக அபர்ணா தாஸ் நடிக்க உள்ளார். இவர் விஜய் நடித்து ரிலீசுக்கு ரெடி ஆகி இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
தொடர்ந்து விஜய் படத்தில் நடித்த துணை நடிகைகளை தேர்ந்தெடுத்து கவின் நடித்து வருகிறார் என்று விஜய் ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர். அடுத்தது யார் நயன்தாராவுடன் நடிப்பாரா? என்று சிலர் கேள்வி கேட்டு கவினை பதறவைத்துள்ளனர். அதற்கு அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும் செய்கிற வேலை. எனக்கு ஒன்றும் தெரியாது என்று மழுப்பி வருகிறார்.
கவின் அடுத்ததாக விக்னேஷ் சிவன் நயன்தாரா தயாரிக்கும் ஊர்க்குருவி எனும் படத்தில் நடிக்க உள்ளார். அபர்ணா தாஸ் உடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த பட வேலைகள் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.