லேடி சூப்பர்ஸ்டார் நிலைமை இம்புட்டு மோசமா போச்சே… கவின் படத்தில் என்ன கேரக்டர் தெரியுமா?

Published on: May 30, 2024
---Advertisement---

Kavin: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக கொடி கட்டி பறந்துவந்த நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்கள் அவர் கேரியரையே ஆட்டிவைக்கும் விதத்தில் இருக்கிறது. அந்த வகையில் கவின் நடிப்பில் உருவாகும் படத்தில் நயனின் கேரக்டர் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நயன்தாரா ஐயா படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியானார். ஆனால் அவருக்கு அந்த எண்ட்ரி பெரிய அளவில் உதவி செய்யவில்லை. தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தாலும் வல்லவன் படத்திற்கு பின்னர் பிரேக் எடுத்தார். சில காலம் கழித்து சிவாஜி படத்தில் ஒற்றை பாடலுக்கு எண்ட்ரி கொடுத்தார். தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இதையும் படிங்க: கடவுளுக்கே என்னைப் பிடிக்கும்… அடங்கப்பா… இது சத்யராஜ் அடித்த அல்டிமேட் லூட்டிப்பா..!

அதுமட்டுமல்லாமல் அனுஷ்காவிற்கு பின்னர் தனி நாயகியாக அதிக வெற்றிகளை கொடுத்தவர். தொடர்ச்சியாக ஹீரோக்களே இல்லாமல் வெற்றி படங்களில் நடித்து அசத்தினார். லேடி சூப்பர்ஸ்டார் என அவரை ரசிகர்கள் புகழ தொடங்கினர். ஆனால் நயனின் அந்த கேரியர் சில நாட்களாகவே வீழ்ச்சியில் தான் இருக்கிறது. தொடர்ச்சியாக நயனின் நடிப்பில் வெளியான 12 படங்களுமே தோல்வியில் தான் முடிந்தது. இதனால் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தினையுமே இழக்கும் நிலையில் இருக்கிறார்.

தற்போது முன்னணி நட்சத்திரங்கள் இல்லாமல் சின்ன நடிகர்களின் படங்களில் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கிறது. அந்த வகையில் கவினின் கவின்08 படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அந்த வகையில், கவினின் காதலியாக தான் நயன் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் கவின் தன்னை விட வயது அதிகமான நயனை காதலிக்கும் கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம்.

இதையும் படிங்க: சத்யராஜ் தேவை இல்லாத ஆணி!.. முந்திரி கொட்டையை வெளியே அனுப்புங்க என ரஜினிகாந்த் ரசிகர்கள் அலப்பறை!..

ஏற்கனவே தமிழில் மேக்னா ராஜ் நடிப்பில் காதல் சொல்ல வந்தேன் திரைப்படம் இதே கதையில் ரிலீஸாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. லியோ மற்றும் டாடா படங்களுக்கு பாடல் எழுதிய விஷ்ணு இடவன் அறிமுக இயக்குனராக கோலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.