மனச கெடுக்குறதே வேலையா போச்சு!.. பளிச் அழகில் வசீகரிக்கும் முல்லை நடிகை...
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சீரியலுக்கு நடிக்க போனவர் காவ்யா அறிவுமணி. பாரதி கண்ணம்மா சீரியலில்தான் இவர் அறிமுகமானார்.
அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்திருந்தார். அண்ணன், தம்பி உறவுகளை பெற்றி பேசும் இந்த சீரியலில் முல்லையாக நடித்து வந்த சித்ரா இறந்துபோய்விட அவருக்கு பதில் அந்த வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா.
இவர் சென்னையை சேர்ந்தவர். கல்லூரி படிப்பை முடித்த பின் சினிமா மற்றும் மாடலிங் துறையில் நுழைய ஆசைப்பட்டவர் இவர். ஒருகட்டத்தில் இந்த சீரியலில் இருந்து காவ்யா விலகினார்.
சீரியலிலேயே நடித்து கொண்டிருந்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என நினைத்தார் போல. மிரள் என்கிற திரைப்படத்தில் மட்டும் நடித்திருந்தார்.
ஒருபக்கம், எப்படியாவது வாய்புகளை பெறுவதற்காக சீரீயலில் இழுத்தி போர்த்தி நடித்து வந்த காவ்யா கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்டார். இதற்கு அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களே சாட்சி.
இந்நிலையில், பளிச் அழகில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை வசீகரித்து வைரலாகி வருகிறது.