அய்யய்யோ அப்படி பார்க்காதீங்க!.. டிராகன் ஹீரோயின் கயாடு லோஹரை பார்த்து கன்ட்ரோல் இழந்த ஃபேன்ஸ்!..

by Saranya M |   ( Updated:2025-05-02 09:49:17  )
கயாடு லோஹர்
X

நடிகை கயாடு லோஹர் மாடலிங் துறையில் தனது வாழ்க்கையை தொடங்கி கன்னட படமான முகில்பேட்டே படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு, தெலுங்கில் அல்லூரி, மராத்தியில் ஐ ப்ரேம் யூ என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றார். அதை தொடர்ந்து நடிகர் அதர்வா முரளியுடன் இதயம் முரளி மற்றும் சிம்புவுடன் எஸ்டிஆர் 49 படத்திலும் நடித்து வருகிறார்.

வட இந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும் விரைவில் தமிழை கற்றுக்கொண்டு தமிழ் ரசிகர்களிடம் நீங்கள் பெருமைப்படும் அளவிற்கு நான் நடந்துக்கொள்வேன் என அழகாக கூறியுள்ளார். டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல நடிகைகளுக்கு போட்டியாக வளர்ந்துவிட்டார் கயாடு லோஹர்.

தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா மற்றும் சில நடிகைகளின் பட வாய்ப்புகள் கயாடு லோஹரால் கை நழுவி போவதாக தகவல்கள் கூட வெளியாகி வருகின்றன. சமீபத்தில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைலாகி இருந்தது. கயாடு லோஹர் தன்னுடைய அழகு மற்றும் நடிப்பு திறமையினால் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாகி உள்ளார்.

எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் கயாடு லோஹர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் தற்போது வெள்ளை நிற உடையில் தொப்பி அணிந்துக்கொண்டு செம்ம கியூட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அரை டவுசர் அணிந்துக் கொண்டு அவர் செம ஹாட்டாக போஸ் கொடுத்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Next Story