கயல் சீரியலால் வாழ்க்கையே போச்சு… நடிகர் மனைவி ஷூட்டிங் ஸ்பாட்டில் அட்டகாசம்…

by Akhilan |   ( Updated:2025-04-04 22:54:05  )
கயல் சீரியலால் வாழ்க்கையே போச்சு… நடிகர் மனைவி ஷூட்டிங் ஸ்பாட்டில் அட்டகாசம்…
X

kayal

Kayal: சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் முக்கிய நடிகரின் மனைவி ஷூட்டிங்கில் வந்து சம்பவம் செய்த விஷயம் பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக மக்கள் தான் சீரியல் சரி இல்லை. இதை பார்ப்பதால் குடும்பத்தில் சிக்கல் என பல புகார்களை முன் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் தற்போது சீரியல் நடிகரின் மனைவி இப்படி இறங்கி ரோட்டில் சண்டை போட்ட சம்பவம் பலருக்கும் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயல். இதில் ஒரு பெண் தன்னுடைய குடும்பத்துக்காக எப்படி உழைக்கிறார் என்பதுதான் கதை. குடிக்கார அண்ணன், பொருப்பில்லாத தம்பி, ஏமாந்த தங்கை என வரிசையாக குடும்பமே பிரச்னையை உருவாக்கி வைத்து இருக்கிறது.

இதில் அண்ணன் மூர்த்தி குடும்பத்தை பார்க்காமல் குடியென வாழும் ஊதாரியான கேரக்டர். இதில் நடித்து வருகிறார் ஐயப்பன். இவர் இதற்கு முன் கனா காணும் காலங்கள், தென்றல் உள்ளிட்ட தொடர்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு பிந்தியா என்று பெண்ணுடன் திருமணம் ஆகி 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.

kayal

இந்நிலையில் கயல் சீரியலின் படப்பிடிப்பு சென்னை மதுரவாயில் பகுதியில் நடந்து வந்துள்ளது. அங்கு சென்ற மனைவி பிந்தியா தன்னுடைய கணவரை பார்க்க வேண்டும் என சத்தம் போட்டுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை உள்ளே அனுப்பாமல் வெளியில் வந்ததும் பேசிக்கொள்ளுங்கள் என்றார்களாம்.

இதுகுறித்து பேசிய பிந்தியா, என்னுடைய கணவர் 3 வருடங்களாக கயல் சீரியலில் நடிக்க தொடங்கிய பின்னர் வீட்டை கவனிப்பதே இல்லை. குடும்பத்துக்கு காசு கொடுப்பதும் இல்லை. போதைக்கு அடிமையாகி 2 மாதங்களாக சைக்கோ போலவும் நடந்து கொள்கிறார்.

மூர்த்தி கதாபாத்திரத்தால் தான் என்னுடைய கணவரும் நிஜ வாழ்க்கையில் அப்படி நடந்து கொள்கிறார். அவரை இந்த கேரக்டரில் இருந்து நீக்க வேண்டும். நாங்கள் வேறு பிழைப்பு நடத்தி கொள்கிறோம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

வீட்டிற்கும் வராமல் இருப்பதால் நேரில் நியாயம் கேட்க சென்ற பிந்தியாவை வெளியில் தள்ளி கதவை சாத்தி விட்டனர். நடிப்பவர்கள் நிலைமையே இப்படி என்றால் பார்ப்பவர்கள் நிலைமை பாவமப்பா!

Next Story