தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் கே.பி.சுந்தராம்பாள். 1908 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்த இவர், சிறு வயதிலேயே நன்றாக பாடக்கூடிய திறமையை பெற்றிருந்தார். எனினும் வறுமையின் காரணமாக ரயிலில் பாடி காசு பெரும் நிலை ஏற்பட்டது.
இவரின் குரல் வளத்தை பார்த்த ஒரு நாடகக்காரர், இவரை அவர் நாடகத்தில் நடிக்கவைப்பதற்கும் பாடவைப்பதற்கும் அழைத்துச் சென்றார். அங்குதான் கே.பி.சுந்தரம்பாளின் வாழ்க்கையே மாறியது.
நாடகத்துறையில் புகழ்பெற்ற நடிகையாகவும் பாடகியாகவும் வளர்ந்த சுந்தராம்பாள், அக்காலகட்டத்தில் மிகவும் வீரியமாக நடந்துகொண்டிருந்த சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டார். மேலும் அக்காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடகராக திகழ்ந்த எஸ்.ஜி.கிட்டப்பாவை திருமணம் செய்துகொண்டார்.
இதனை தொடர்ந்து 1935 ஆம் ஆண்டு “நந்தனார்” திரைப்படத்தில் நடித்தார். அதில் சில பாடல்களையும் பாடினார். அதன் பின் “மணிமேகலை”, “அவ்வையார்”, “பூம்புகார்”, “திருவிளையாடல்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். அந்த காலகட்டத்திலேயே 1 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகையாக திகழ்ந்தவர் கே.பி.சுந்தராம்பாள். அந்த அளவுக்கு மிகப்புகழ்பெற்ற நடிகையாகவும் பாடகராகவும் திகழ்ந்தார்.
இதனிடையே ஒரு நாள் கே.பி.சுந்தராம்பாள் ஒரு முறை கடற்கரைக்குச் சென்றிருந்தபோது அங்கு இரண்டு வாலிபர்கள் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்தாராம். அந்த வாலிபர்கள் தனது சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டுவிட்டார் கே.பி.சுந்தராம்பாள்.
அவர்களிடம் சென்று “இந்த ஊரிலே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என கேட்டாராம். அதற்கு அவர்கள் “எங்களுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அதனால்தான் வாய்ப்புக் கேட்டு இங்கே வந்திருக்கிறோம்” என கூறினார்களாம்.
“சரி, இருவரும் நாளை என்னை வந்து பாருங்கள்” என கூறிவிட்டு சென்றுவிட்டாராம் சுந்தராம்பாள். அதற்கு அடுத்த நாள் அந்த வாலிபர்கள் இருவரும் அவரின் இல்லத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கே சுந்தராம்பாள் அவர்களிடம் ஒரு சிபாரிசு கடிதத்தை நீட்டி இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கனை போய் பார்க்கச் சொன்னாராம்.
இதையும் படிங்க: உள்ளாடை அணியாமல் வந்து படக்குழுவினரை ஸ்தம்பிக்க வைத்த பிரபல நடிகை… ஆனாலும் இப்படியா அடம்பிடிக்கிறது??
அந்த இரு வாலிபர்களும் எல்லீஸ் ஆர் டங்கனை பார்க்கச் சென்றிருக்கின்றனர். அந்த இருவரில் ஒருவரை மட்டும் அவர் நடிகராக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். அந்த நடிகரின் பெயர்தான் பிரபல வில்லன் நடிகராக திகழ்ந்த பி.எஸ்.வீரப்பா.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…