அதிகம் சம்பளம் வாங்கிய கே.பி.சுந்தரம்பாள் வாழ்வில் நடந்த சோகம்... இதனால் தான் இப்படி இருந்தாரா?
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக திகழ்ந்த கே.பி.சுந்தரம்பாள். தனது சொந்த வாழ்வில் நிம்மதியாக இருந்ததே இல்லையாம். பிரச்சனைகளை மட்டுமே சந்தித்ததாக தெரிகிறது.
நல்லதங்காள் நாடகத்தில் முதன்முறையாக தோன்றினார் சுந்தரம்பாள். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்
பினை பெற்றார். சொந்தக் குரலிலேயே பாடி நடிப்பதே இவரின் மிகப்பெரிய சிறப்பு. கண்ணதாசன் வரிகளில் இவர் பாடிய பழம் நீயப்பா... எனத் துவங்கும் பாடல் ரசிகர்களிடம் இன்று வரை மிகப் பிரபலமாக இருக்கிறது.
நடிகைகளில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் உலகில் முதன்முறையாக லட்சத்தில் சம்பளம் வாங்கிய நடிகையாக இருந்தவர். ஆனால் சொந்த வாழ்வில் தினம் தினம் பயத்துடன் வாழ்ந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. பெரிய வீட்டில் இருந்த கே.பி.சுந்தரம்பாள் சொந்த ஊரிலுள்ள தனது தாய்மாமன் குடும்பத்தினரால் ஆபத்து வரும் என அடிக்கடி பயத்திலே இருப்பாராம். அதனால் அவரின் வீடு எப்போதும் பூட்டப்பட்டே இருக்குமாம்.
தனது வீட்டின் மேல் தளத்தினை அப்போது நடிகராக இருந்த கலைஞானத்திற்கு வாடகைக்கு கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் மேல் வீட்டிற்கு தன்னுடைய வீட்டில் இருந்து ஒரு பெல் கனெக்ஷன் இருக்கிறது. எனக்கு எதும் பிரச்சனை நேர்ந்தால் உடனே அந்த பெல்லை அழுத்துவேன். எனக்கு உதவ வேண்டும். அதுமட்டுமல்லாமல் யாரையும் நான் நம்பமாட்டேன் என்பதால் வேலைக்காரர் வைத்து கொள்ளவில்லை. மதியம் மட்டும் எனக்கு சாப்பாடு கொடுங்கள். வாடகை கொஞ்சமாக கொடுத்தால் போதும் எனக்கூறியே நடிகர் கலைஞானம் குடும்பத்தினரை வீட்டில் குடி வைத்ததாக கூறப்படுகிறது.