என்ன இது மடத்தனம்... ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தினை விமர்சித்த பாலசந்தர்...

by Akhilan |
பாலசந்தர்
X

ரஜினிகாந்த் – பாலசந்தர்

தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகரான ரஜினிகாந்தினை அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் பாலசந்தர். தன் சிஷ்யன் என்றால் கூட அவர் தவறு செய்யும் நேரத்தில் கணம் யோசிக்காமல் திட்டியும் விடுவாராம். இப்படி ரஜினியை பாலசந்தர் விமர்சித்த நிகழ்வும் நடந்து இருக்கிறது.

1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் சின்ன வேடத்தின் மூலமே சினிமாவிற்குள் வந்தார் ரஜினிகாந்த். தொடர்ச்சியாக வில்லனாக அவர் நடித்த மூன்று முடிச்சு திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய ரீச்சினை கொடுத்தது. 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக தொடர்ந்து நடித்தார்.

பாலசந்தர்

அபூர்வ ராகங்கள்

அடுத்து புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் திரைப்படங்களில் இவருக்கு ஹீரோ வேடம் வந்தது. அதுவே இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அங்கு தொடங்கிய அவர் கிராப் மிகப்பெரிய உச்சத்தினை தற்போது தொட்டு இருக்கிறது.

ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்திய பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நிறைய படங்கள் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவரின் கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் பல படங்களிலும் நடித்திருக்கிறார். அதில் ஒரு படம் தான் அண்ணாமலை.

அண்ணாமலை

இப்படத்தினை சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்த பாலசந்தருக்கு பிடிக்கவில்லையாம். நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் அறிமுகப்படுத்தியது ஒரு நடிகனை தான். இது என்ன மடத்தனம் என விமர்சித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Story