ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் முந்தானை முடிச்சு. இந்தப்படத்தில்; நடித்து இயக்கி இருந்தார் கே.பாக்யராஜ். படத்தில் வரும் விளக்கு வச்ச நேரத்துல பாடல் பற்றி தனது நினைவுகளை பகிர்கிறார்.
இளையராஜாவும், ஜானகியும் பாடிய இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒரு காலத்தில் பட்டையைக் கிளப்பியது. அப்படிப்பட்ட பாடல் எப்படி பிறந்தது என்று பார்த்தால் அது ஒரு சுவாரசியமான அனுபவம் தான். முதலில் இந்தப்பாடலின் பல்லவி வேறு மாதிரியாகத்தான் இருந்தது. எது எப்படி அமையும்னு முதல்ல சொல்ல முடியாது. அதையே யோசிச்சிக்கிட்டே இருந்தால் தான் அது சுவாரசியமாக வரும்.
விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்…மறைஞ்சு நின்னு பார்க்கையில தாகம் என்றான். நான் கொடுக்க…அவன் குடிக்க..அந்த நேரம் தேகம் சூடு ஏற… என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடலைப் படித்ததும் இளையராஜா என்ன இப்படி எழுதிருக்கீங்கன்னார். ஏங்க நான் கிளுகிளுப்பா தானா எழுதிருக்கேன்…இல்ல இல்ல இதெல்லாம் பாட மாட்டேன்…ஏன்னு கேட்டதுக்கு நான் மாலை போட்டுருக்கேன். உங்கள யாரு மாலையை போட சொன்னா…ன்னு கேட்டேன்.
என்ன நான் மாலை போட்டதுக்கு நீங்க இப்படி எல்லாம் கேட்குறீங்கன்னார். ஏங்க சினிமாவுக்கு நாங்க சினிமா எடுக்கறோம். நீங்க மாலை போட்டு இருக்கீங்கங்கறதுக்காக நாங்க என்ன சாமி படமா எடுக்க முடியும். ஒண்ணு நீங்க நான் மாலை போடும்போது இந்த மாதிரி கம்போசிங்குல உட்காரலன்னு சொல்லிருங்க. இல்ல மாலையை கொஞ்சம் ஏதாவது வச்சி மறைச்சு வச்சிக்கிட்டு எங்களுக்கு என்ன கிளுகிளுப்பு வேணுமோ அதை மறந்துருங்க.
சாமியை மறந்து இதுக்கு வாங்க..ன்னேன். அப்புறம் ஒரே கோபம். ஜானகி அம்மா தான் லைன் நல்லா இருக்கு பாடுங்கன்னு சொன்னதுக்கு அப்புறமா பாடினார். அப்பவும் அந்த கடைசி லைன்ல விளக்கு வச்ச நேரத்துல தன்னானனான்னு பாடியிருப்பார்.
அடுத்தது மறைஞ்சி நின்னு பார்க்கையில தரிநானன்னா ன்னு பாடியிருப்பார். நான் மாமன் வந்தான்னு எழுதிருப்பேன். உடனே சாரி…கடைசி நேரத்துல எழுதிக்கொடுத்ததால அதை மறந்துட்டேன்னு சொன்னாரு. இன்னொரு டேக் போடுங்க…பாடுறேன்னாரு. நான் ஜானகி அம்மாவ பேக் அப் சொல்லிட்டேன்…
நான் இன்னும் வார்த்தையே பாடலியேன்னேன்…இல்ல…நீங்க முதல்ல செக்ஸா இருக்கு பாட மாட்டேன்னு சொல்லிட்டீங்க…இப்ப நீங்க பாடுனதுதான் உண்மையிலேயே செக்ஸா இருக்குன்னு சொன்னேன். விளக்கு வச்ச நேரத்துல தன்னானனன்னா…
மறைஞ்சி நின்னு பார்க்கையில தரனானன்னா…அதனால நாங்க எதிர்பார்த்தத விட ரொம்ப நல்லா அமைஞ்சு வந்துருச்சுன்னு சொன்னேன்….இல்ல…இல்ல…நான் பாடிருறேன்னாரு…வேண்டவே வேண்டாம் நீங்க மாலை போட்டுருக்கீங்க. பாட வேண்டாம்னு சொல்லிட்டேன்.
அந்த தப்பு செய்யாதீங்க உட்ருங்கன்னு சொன்னேன். அப்புறம் சரவணன் சார் எல்லாம் சிரிச்சி…நீங்க சரியான ஆளு…எப்படியோ பாட்டு நல்லா வந்தா போதும்னுட்டாரு.
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…