நடிகர் பிரபாஸுடன் காதலா?.. உண்மையை போட்டு புடைத்த நடிகை...
நடிகர் பிரபாஸும், கிருத்தி சனோனும் காதலிப்பதாக பரவி வரும் வதந்தி குறித்து நடிகை தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் இணைந்து நடித்துள்ளனர். இதனிடையே, கிருத்தி சனோன், வருண் தவானுடன் நடித்த பீடியா திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.
இந்த படத்திற்கான ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது வருண் சும்மா இல்லாமல் ஒரு விஷயத்தினை கொழுத்தி போட்டு விட்டு சென்றார். கிருத்தி ஒருவரின் உள்ளத்தில் இருக்கிறார். ஆனால் அவர் தற்போது மும்பையில் இல்லை. தீபிகா படுகோனேவுடன் ஷூட்டிங்கில் இருக்கிறார் எனக் கூறி இருந்தார். தீபிகாவுடன் நடித்து வருவது ஆதிபுருஷ் நாயகனாக பிரபாஸ் தான். இதனால் அவருக்கும், கிருத்திக்கு காதல் என இணையமே புயல் அடித்தது.
இதையும் படிங்க: கைதியை கைவிட்ட லோகேஷ் கனகராஜ்… தெலுங்கு பிளாப் ஸ்டார் உடன் கைகோர்க்க திட்டம்..?
இதுகுறித்து விளக்கமளித்துள்ள கிருத்தி, வருண் தவான் பேட்டிகளில் ஓவராக பேசிவிடுவார். இந்த செய்தி முற்றிலும் வதந்தி தான். இந்த தகவலை வைத்து சில ஊடகங்கள் என் திருமண தேதியை கூட அறிவித்து விட்டனர். தயவு செய்து இதனை யாரும் பரப்பவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
கிருத்தியின் இன்ஸ்டா ஸ்டோரியை பகிர்ந்த வருண், இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு இருக்கிறது. நாங்கள் விளையாட்டாகவே எடுத்து கொள்கிறோம். உங்கள் கற்பனையை வீணாக ஓடவிடாதீர்கள் எனத் தெரிவித்து இருக்கிறார். சிலரோ பீடியா படத்திற்காக தேடப்பட்ட பப்ளிசிட்டி தான் இது எனக் கூறப்படுகிறது.