பிகினி உடையில் மாலத்தீவில் கணவருடன் நெருக்கம் காட்டும் கீகி... வைரலாகும் புகைப்படங்கள்....!
சமீபகாலமாகவே கோலிவுட் மட்டும் அல்லாமல் அனைத்து நடிகைகளும் மாலத்தீவிற்கு டிரிப் அடித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் மாலத்தீவில் வித விதமான போட்டோக்களை எடுத்து சோசியல் மீடியாவை தெறிக்க விட்டு வருகிறார்கள். அந்த போட்டோவை பார்த்தாலே நமக்கும் மாலத்தீவு போகவேண்டும் என்ற ஆசை உண்டாகும்.
இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் தொகுப்பாளினி ஒருவர் அவரது கணவருடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அவர் வேறு யாருமல்ல பிரபல தொகுப்பாளினியும், நடிகர் சாந்தனுவின் மனைவியுமான கீர்த்தி தான். முன்னதாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட நிகழ்ச்சியை கீர்த்தி தொகுத்து வழங்கி வந்தார்.
அந்த சமயத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட கீர்த்தி திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதுதவிர டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார்.
அதேபோல் கீர்த்தியின் கணவர் சாந்தனுவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து விடுமுறையை கழிக்க மாலத்தீவிற்கு சென்றுள்ளனர். அங்கு பிகினி உடையில் குளியல் போட்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இணையவாசிகளை தெறிக்கவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் கீகி நீங்களா இப்படி? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.