மொத்த அழகையும் காட்டி ஃபிளாட் ஆக்கிட்டியே!.. சைனிங் அழகில் ஸ்கோர் பண்ணும் கீர்த்தி ஷெட்டி..

by சிவா |
keerthi shety
X

Keerthi shetty: பெங்களூரை சேர்ந்தவர் என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. டீன் வயதிலேயே மாடலிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்படியே நடிக்கும் ஆசையும் வந்தது. இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். சூப்பர் 30 என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

keerthi

அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் கொஞ்சம் உல்டா செய்து எடுக்கப்பட்ட உப்பெண்ணா என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது.

keerthi

எனவே, கீர்த்திக்கு தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. ஞானியுடன் ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நடித்தார். அதன்பின் சில படங்களில் நடித்தார். தமிழ் திரைப்பட இயக்குனர் லிங்குசாமி டோலிவுட்டுக்கு போய் இயக்கிய வாரியர் படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.

keerthi

அதேபோல், வெங்கட்பிரபு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கிய கஸ்டடி படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். ஆனால், இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இப்போது கார்த்தி நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

keerthi

சில தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் கீர்த்தி தனது சைனிங் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற புடவை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

keerthi

Next Story