இப்படி பாத்தா கூடவே வந்துடுவோம்!.. கிக் ஏத்தும் லுக்கில் கீர்த்தி ஷெட்டி...
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. ஆனால், கர்நாடகாவை சேர்ந்தவர். சில விளம்பர படங்களில் நடித்தார். அப்படியே சினிமா வாய்ப்பு வர சூப்பர் 30 என்கிற ஹிந்தி படத்தில் நடித்தார்.
விஜய்சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்த உப்பென்னா படம் மூலம் தெலுங்கில் நடிக்க துவங்கினார். முதல் படமே வெற்றி. அட அழகாக இருக்கிறரே என அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.
ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட சில படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கோலிவுட் பட இயக்குனர் லிங்குசாமி ஆந்திராபோய் இயக்கிய ‘தி வாரியர்’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இடம் பெற்ற புல்லட்டு பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. ஆனால், அந்த படம் வெற்றியடையவில்லை.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கஸ்டடி’ படத்திலும் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் தோல்வி அடைந்தது. சூர்யா - பாலா கூட்டணியில் வணங்கான் படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது.
ஆனால், அந்த படம் பல பிரச்சனைகளை சந்தித்ததால் அதிலிருந்து வெளியேறினார். இது எல்லாவற்றையும் விட கவர்ச்சி உடைகளில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் கீர்த்தி அதிகம் பிரபலமானார்.