தமிழ் சினிமா வேண்டாம்..அங்கதான் அதிக சம்பளம்!... இது நியாயமா கீர்த்தி சுரேஷ்?!..

by சிவா |   ( Updated:2022-03-21 10:05:21  )
keerthi
X

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

keerthi

இன்னும் சொல்லப்போனால் தமிழை விட தெலுங்கில்தான் அதிக திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக அவர் நடிக்கும் படங்கள் வெளியாகவுள்ளது. Sarkaru vaari paata, Bhola shankar, Dasara ஆகிய தெலுங்கு படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் ஏன் தெலுங்கில் அதிகமாக நடிப்பதற்கு காரணம் அங்கு தமிழை விட அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதால்தான். தமிழில் வாய்ப்பு வந்தால் இப்போதைக்கு முடியாது என மறுத்து விடுகிறாராம். அல்லது கதையை கேட்டுவிட்டு பிறகு சொல்கிறேன் என அனுப்பி விடுகிறாராம்.

keerthi

தமிழில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தில் மட்டும் கமிட் ஆகியுள்ளார். இப்போது கீர்த்தி சுரேஷ் கையில் உள்ள ஒரே திரைப்படம் இப்படம் மட்டுமே. முதல்வரின் மகன் என்பதால் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

keerthi

கீர்த்தி சுரேஷின் தாய் மொழி மலையாளம். ஆனால், மலையாளத்தில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஏனெனில், மலையாள சினிமாவில் மிகவும் குறைவான சம்பளமே கொடுப்பார்கள் என்பதால் அம்மணி அதில் ஆர்வம் காட்டுவதில்லை.

காரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.. காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!...

Next Story