ஒரு டிரஸ்ஸோட விலை இத்தனை லட்சமா? விருது விழாவிற்கு காஸ்ட்லி டிரெஸ்ஸில் வந்து கெத்து காட்டிய நடிகை!
விருது வழங்கும் விழா அல்லது ஏதாவது புதிய படங்களின் புரமோஷன் மற்றும் ஆடியோ லாஞ்ச் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நடிகைகள் தங்களை பிரத்யேகமாக தயார் செய்வார்கள். அதாவது அந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் போடும் டிரெஸ், நகைகள் மற்றும் மேக்கப் என அனைத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்வார்கள்.
அவர்களை பார்த்து மற்றவர்கள் வியக்கும் அளவிற்கு தங்களை அழகாக தயார் செய்வது வழக்கம். அந்த வகையில் இளம் நடிகை ஒருவர் சமீபத்தில் பங்கேற்ற விருது விழா ஒன்றிற்கு மிகவும் விலையுயர்ந்த ஆடையை அணிந்து வந்து கெத்து காட்டியுள்ளார்.
அந்த நடிகை வேறு யாருமல்ல தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தான். தற்போது இவர் நடிப்பில் தமிழில் சாணிக்காயிதம் என்ற படம் ஓடிடியிலும், தெலுங்கில் சர்காரு வாரிபட்டா என்ற படம் தியேட்டரிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் கலாட்டா மீடியா சார்பாக நடத்தப்பட்ட விருது விழா ஒன்றில் பங்கேற்றார். இந்நிலையில் இந்த விழாவிற்கு அவர் அணிந்து வந்த உடையின் விலையை கேட்டு பலரும் வாயடைத்து போயுள்ளனர்.
ஆமாங்க அதன்படி கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த அந்த ஆடையின் விலை சுமார் 6 லட்சமாம். இதை கேட்டு பலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் தற்போது அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.