ஐயோ சைனிங் கன்னம் சும்மா அள்ளுது!.. ஸ்டைலீஷ் லுக்கில் மயக்கும் கீர்த்தி சுரேஷ்...
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மா மேனகா தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தவர்.
பள்ளியில் படிக்கும்போதே நடிகையாக வேண்டும் என்கிற ஆசை கீர்த்திக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பள்ளி படிப்பையும், சென்னையில் ஃபேஷன் டிசைன் படிப்பையும் முடித்தார். லண்டன் சென்றும் சில படிப்புகளை படித்தார்.
சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ என்கிற படத்தில் அறிமுகமானார். அடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் அவரின் சினிமா வாழ்கையையே மாற்றிப்போட்டது.
இதையும் படிங்க: வயசு பசங்க பாவம் விட்டுடு செல்லம்!.. நச்சின்னு காட்டி தூக்கத்தை கெடுக்கும் ஜான்வி கபூர்…
அதன்பின் பல படங்களில் நடித்தார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடித்தார். அங்கும் பல ஹிட் படங்களில் நடித்ததோடு, மகாநடி படத்தில் நடித்துதேசிய விருதும் வாங்கினார்.
தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார். பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.