திடீரென பிரபல ஹீரோவை அறைந்த விஜய் பட நாயகி!
தெலுங்கில் நடிகையா் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்ததன் மூலம் கீா்த்தி சுரேஷ் அங்கு தனது கொடியை கம்பீரமாக ஊன்றி இருக்கிறாா். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். நிறைய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் இது என்ன மாயம் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் தான் பெரிய அளவில் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்பின்னர் தொடரி சர்க்கார், பைரவா, என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒரு பக்கம் தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.இவர் நடிப்பில் அடுத்ததாக சாணிக் காயிதம் எனும் திரைப்படம் வெளியாக உள்ளது இந்த திரைப்படத்தை ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தனது உடல் எடையை பாதியாக குறைத்து சிக்கென மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது மாடர்ன் உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது மகேஸ்பாபுடன் சா்காரு வாரி பாருடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படமானது வருகிற 12ம் தேதி வெளியாக உள்ளது. இதன் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. அந்த பாடல் காட்சியின் போது கீர்த்தி சுரேஷ் தவறுதலாக மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்து விட்டார்.
இந்நிலையில் கீர்த்தி இதுகுறித்து கூறியதாவது, பாடல் காட்சியில் நடிக்கும் போது தவறுதலாக தெரியாமல் மகேஷ் பாபு சாரின் முகத்தில் அடித்து விட்டுன். உடனே பதறிபோய் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அவா் அதை பெரிதாக எண்ணாமல், அதனால் ஒன்றும் இல்லை கவலைப்பட வேண்டாம் என என்னிடம் தெரிவித்தாா். எனது மனது பதறிய நிலையில் திரும்ப திரும்ப அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அவா் பெரியது படுத்தாமல் சின்ன செயல்களில் ஒன்றாக நினைத்து கொண்டார் என கூறியுள்ளார்.
பரசுராம் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சமுத்திரகனி, வெண்ணிலா கிஷோர் நடித்துள்ளனா். இதில் கீர்த்தி சுரேஷ் கலாவதி என்ற ரோலில் இதுவரை இல்லாத வித்தியாசமான முறையில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.