Entertainment News
உன் கிளாமரை பார்த்து கிறுகிறுத்து போனோம்!.. விதவிதமா காட்டும் கீர்த்தி சுரேஷ்…
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பின் இவருக்கு மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
தனுஷ், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். ஒருபக்கம் தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை விவரிக்கும் மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.
அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். பென்குயின், சாணி காயிதம் உள்ளிட்ட சில படங்களில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்தார். ஒருபக்கம், வழக்கமான ஹீரோவை சுற்றி வரும் கதாநாயகியாவும் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக, தெலுங்கில் அதிக படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.