Entertainment News
படத்துலதான் இழுத்து மூடுவேன்!.. வெளிய வேறலெவல்!.. தூக்கலான கிளாமரில் கீர்த்தி சுரேஷ்!..
Keerthy suuresh: அம்மா நடிகை என்பதால் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டவர் கீர்த்தி சுரேஷ். இவரின் தாய்மொழி மலையாளம். சிறுமியாக இருக்கும்போது சில மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பெரிய நடிகை ஆக வேண்டும். விஜய், சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்கிற ஆசை பள்ளியில் படிக்கும் போதே ஏற்பட்டது.
அப்போதே தனது தோழிகளிடம் நான் பின்னாளில் இந்த நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பேன் என சொல்லுவாராம். அவர் நினைத்தது எல்லாமே பின்னாளில் நடந்தது. விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களில் நடித்தார். சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.
குறிப்பாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த ரஜினி முருகன் மற்றும் ரொமோ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். மேலும் விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ஒருகட்டத்தில் பெண் வேடத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடிக்க துவங்கினர், மகாநடி படத்திற்காக தேசிய விருது வாங்கினார், அதைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார், தெலுங்கில் அதிக விருதுகளையும் பெற்று வருகிறார்,
அப்படி விருது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கவர்ச்சியாக உடையணிந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து கீர்த்திசுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.