இந்த லெவலுக்கு இறங்கினா நாங்க காலி!.. வேற லெவல் லுக்கில் கீர்த்தி சுரேஷ்...

keerthi
அப்பா கேரளா என்றாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அம்மா மேனகா திரைப்பட நடிகையாக இருந்தவர். ரஜினியின் நெற்றிக்கண் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்.
சிறு வயது முதலே கீர்த்திக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தது. ஏ.எல்.விஜய் இவரை தான் இயக்கிய ‘இது என்ன மாயம்’ என்கிற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின் சில படங்களில் நடித்தாலும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படம் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார். அதன்பின் தனுஷ், விஷால், சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
ஒருபக்கம் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வந்தார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை விவரிக்கும் மகாநடி படத்தில் நடித்து சிறந்து நடிகைக்காக தேசிய விருதை பெற்றார்.
அதன்பின் தமிழிலும், தெலுங்கிலும் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். இப்போது வரை அது தொடர்கிறது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாமன்னன் படத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஒருபக்கம், அசத்தலான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மாடர்ன் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.