மஜாவா இருக்குறியே பஞ்சு மிட்டாயா!.. வேறலெவலில் கிறங்கவைக்கும் கீர்த்தி சுரேஷ்!...

by சிவா |   ( Updated:2024-08-16 08:15:19  )
keerthi
X

Keerthi suresh: தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். சில படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர். தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால் என பலருடனும் நடித்திருக்கிறார்.

keerthi

தமிழை விட தெலுங்கில் இவருக்கு நல்ல கதைகளும், கதாபாத்திரங்களும் கிடைப்பதால் அதில் தொடார்ந்து நடித்து வருகிறார். அப்படித்தான் மகாநடி படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார். மேலும், நானியுடன் இணைந்து இவர் நடித்து வெளியான தசரதா படத்திற்கும் விருதுகளை பெற்றுள்ளார்.

keerthi

இவரின் அம்மா மேகனாவும் நடிகையாக இருந்தவர்தான். ரஜினி நடித்து வெளியான நெற்றிக்கண் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும், சில மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷை விஜயுடன் தொடார்புபடுத்தி செய்திகள் வெளிவந்தது.

keerthi

ஆனால், இதையெல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை. புதுப்புது படங்களில் நடிப்பது, திரைப்படங்கள் தொடர்பான விழாக்களில் கலந்து கொள்வது என பிசியாக இருந்து வருகிறார். தமிழில் இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். ஆகஸ்டு 15ம் தேதி அவரின் நடிப்பில் ரகுதாத்தா என்கிற படம் வெளியாகவுள்ளது.

keerthi

இது இந்தி திணிப்புக்கு எதிரான படம் என அவரே சொல்லி இருக்கிறார். எனவே, இந்த எதிர்ப்பை சந்திக்குமா என்பது தெரியவில்லை. ஒருபக்கம், விழாக்களுக்கு போகும் கீர்த்தி சுரேஷ் போட்டோஷூட் செய்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். சில சமயம் ஓவர்டோஸ் கவர்ச்சி காட்டியும் ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார். இந்நிலையில், கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

keerthi

Next Story