படக்குழுவினரை கதறி கதறி அழவைத்த கீர்த்தி சுரேஷ்.. அப்படி என்ன நடந்தது?.....

keerthi suresh
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் புகழடைந்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த ரஜினிமுருகன், ரெமோ ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க செய்தது.
எனவே, விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். விஜயுடன் மட்டும் பைரவா, சர்கார் என 2 படங்களில் நடித்தார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை விவரிக்கும் ‘நடிகர் திலகம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் பெற்றார்.
தற்போது சில புதிய படங்களில் அவர் தங்கை வேடத்தில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாகவும், சாணி காயிதம் படத்தில் செல்வராகவனின் தங்கையாவும், அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு தங்கையாகவும் அவர் நடித்து வருகிறார்.
இதில் சாணி காயிதம் படத்தில் ஒரு காட்சியில் கிளிசரின் கூட போடாமல் அவர் அழுதுகொண்டே நடித்ததை பற்றித்தான் தற்போது திரைத்துறையினர் பேசி வருகின்றனர். அதுவும் தொடர்ந்து 4 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் அழுது நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதைப்பார்த்து படப்பிடிப்பு குழுவினரே அழுது விட்டார்களாம்..
சாணி காயிதம் தொடர்பான போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.