கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மா நடிகை என்பதால் இவரும் நடிகையாகிவிட்டார்.

சிறுமியாக இருந்தபோதே சில மலையாள திரைப்படங்களில் நடித்தார். இரண்டு படஙக்ளில் கதாநாயகியாகவும் நடித்தார். தமிழில் இது என்ன மாயம் என்கிற படம் மூலம் கீர்த்தி அறிமுகமானார்.

அதன்பின் இதுவரை அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வருகிறார். ரஜினி முருகன், ரெமோ படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடனும் நடித்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். மகாநடி படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.

தற்போது தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக மாறிவிட்டார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கையில் பூச்செண்டை வைத்துக்கொண்டு க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

