எல்லா அங்கிளிலும் செம ஹாட்டு!.. டாப் கிளாஸ் கிளாமரில் தூக்கி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்!..
நெற்றிக்கண் படத்தின் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மேனகாவின் மகள்தான் கீர்த்தி சுரேஷ். அம்மா நடிகையாக இருந்ததால் சிறு வயது முதலே இவருக்கும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக சில மலையாள படங்களில் நடித்தார். தமிழில் இது என்ன மாயம் என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார்.
அதன்பின் சில படங்களில் நடித்தாலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. தனுஷுடன் தொடரி, விக்ரமுடன் சாமி ஸ்கொயர், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஷாலுடன் சண்டக்கோழி 2 என எல்லோருடனும் நடித்தார்.
ஒருபக்கம் தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை வைத்து உருவான மகாநடி படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். அதையடுத்து, தமிழை விட தெலுங்கில் அதிகம் நடிக்க துவங்கினார்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்தார். ஆனால், அண்ணாத்த ஓடவில்லை. பொன்னியின் செல்வன் ஓடிவிட்டது. ஒருபக்கம், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அதோடு, அவ்வப்போது கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.