Entertainment News
கவர்ச்சி காட்டமாலேயே கவுத்துப்புட்ட!….லைக்ஸ் குவிக்கும் கீர்த்திசுரேஷ் கிளிக்ஸ்….
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியவர் கீர்த்தி சுரேஷ். தாய்மொழி மலையாளம் என்றாலும் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரெமோ மற்றும் ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.
தெலுங்கு சினிமா பக்கமும் சென்று அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்துள்ளார். மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தமிழை விட தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார். சாணி காயிதம் படத்தில் கற்பழிக்கப்பட்டு பழிவாங்கும் பெண் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார். ஒருபக்கம், அழகான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.