ரஜினிமுருகன் படத்தில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? ரசிகர்கள் அதிர்ச்சி....
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த படம் தான் ரஜினிமுருகன். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
முன்னதாக கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் ரஜினி முருகன் படம் தான் அவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இப்படத்தில் இடம்பெற்ற உன் மேல ஒரு கண்ணு என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர பிரபலமானது.
தனது முகபாவனைகள் மற்றும் நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் இப்படத்திற்கு பின்னர் விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க தொடங்கி விட்டார். தற்போது கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில், ரஜினிமுருகன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகை தமன்னா தானாம். ஆனால் அந்த சமயத்தில் தமன்னாவின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போனதனாக கூறப்படுகிறது.
ஆனால் தமன்னா இந்த கேரக்டருக்கு பொருந்தி இருப்பாரா என்பது சந்தேகமே. கீர்த்தி சுரேஷ் மிகவும் பொருத்தமாக இருந்ததோடு ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார். ஆனால் தமன்னாவிற்கு அந்த கேரக்டர் பொருத்தமாக இருந்திருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒருவேளை அவர் நடித்திருந்தால் கீர்த்தி சுரேஷ் போல அவரும் டாப்பில் சென்றிருப்பாரோ என்னவோ.