Categories: Entertainment News

இதனாலதான் உனக்கு அடிக்ட் ஆனோம்!….கீர்த்தி சுரேஷின் ரீசண்ட் நச் கிளிக்ஸ்….

தமிழில் விக்ரம் பிரபு, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறைவான படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார்.ரெமோ, ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பழம்பெரும் நடிகை சாவித்ரிவின் வாழ்க்கையை விவரிக்கும் மகாநடி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள பென்குயின், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

Published by
சிவா