Connect with us
keerthi suresh

Entertainment News

இப்படி இருந்தா ஏங்கி போயிடுவோம்!.. கை இல்லாத ஜாக்கெட்டில் சூடேத்தும் கீர்த்தி சுரேஷ்…

Keerthi suresh: கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மா மேனகா சுரேஷ் நடிகையாக இருந்தவர். ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். அம்மா நடிகை என்பதால் இயல்பாகவே சிறுவயதிலிருந்தே கீர்த்திக்கும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

keerthi

சில மலையாள படங்களில் சிறுமியாக நடித்திருக்கிறார். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். சிவகார்த்தியனுக்கு ஜோடியாக அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் இவரை முன்னணி நடிகையாக மாற்றியது.

keerthi

அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் போய் அங்கும் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் தமிழை விட தெலுங்கு மொழி படங்களில் அதிகம் நடிக்க துவங்கிவிட்டார். தெலுங்கில் இவர் நடித்த மகாநடி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. சிரஞ்சீவி, ரஜினி ஆகியோருடனும் நடித்தார்.

keerthi

விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களில் நடித்தார். அஜித்துடன் மட்டும் இன்னும் இவர் நடிக்கவில்லை. கதாநாயகனுடன் டூயட் பாடும் வேலையை மட்டும் செய்யாமல் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்து வருகிறார். சாணி காயிதம், பெண் குயின், அண்ணாத்த ஆகிய படங்களில் இவருக்கு அது போன்ற வேடம் அமைந்தது.

keerthi

ஒருபக்கம், அவ்வப்போது தனது அழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறார். இந்நிலையில், கேரளாவில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top