எந்த ஆங்கிள்ள பாத்தாலும் ஜிவ்வுன்னு ஏறுது!.. கிளுகிளுப்பு காட்டும் கீர்த்தி சுரேஷ்!...

by சிவா |   ( Updated:2024-08-17 08:19:50  )
keerthi suresh
X

keerthi suresh: அம்மா நடிகை என்பதால் சிறு வயது முதலே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவராகவே கீர்த்தி சுரேஷ் இருந்தார். சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இது என்ன மாயம் என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி பின்னர் சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
keerthi


குறிப்பாக ரஜினி முருகன், ரோமோ போன்ற படங்கள் கீர்த்தி சுரேஷை ரசிகர்களுக்கு நெருக்கமாக்கியது. அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் போய் நடிக்க துவங்கினார். இவரின் நடிப்பில் வெளியான சில படங்கள் ஹிட் அடிக்கவே தெலுங்கில் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.

keerthi

ஒருகட்டத்தில் மரத்தை சுற்றி டூயட் பாடும் கதாநாயகியாக மட்டும் நடிக்காமல் ஹீரோ இல்லாத அதாவது பெண் கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தார். அப்படி, பழம்பெரும் நடிகை மறைந்த சாவித்ரியின் வாழ்க்கையை விவரிக்கும் மகாநடி படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகின் பாராட்டை பெற்றதோடு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

keerthi

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ‘அண்ணாத்த’ படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடித்தார். படத்தின் கதையே அவரை சுற்றி நடப்பது போல உருவாக்கப்பட்டிருந்தது. இதற்காக பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை கூட மறுத்தார். இப்போது தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக மாறிவிட்டார்.

keerthi

விஜயுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். இவரின் நடிப்பில் ரகுதாத்தா என்கிற படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

keerthi

அதுவும் சமீபகாலமாக அவரின் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. இந்நிலையில், புடவையில் நச்சென போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் நெட்வொர்க்குகளில் வைரலாகி வருகிறது.

Next Story