உன் சைனிங் அழகை பார்த்தாலே மஜாதான்!. கை இல்லாத ஜாக்கெட்டில் ஜில்லாக்கும் கீர்த்தி சுரேஷ்…

Published on: January 31, 2024
keerthi
---Advertisement---

Keerthi suresh: சமந்தாவை போலவே தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர்தான் கீர்த்தி சுரேஷ். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் இவரின் ஆசையெல்லாம் தமிழ் சினிமாவில் பெரிய கதாநாயகி ஆக வேண்டும் என்பதுதான். பள்ளியில் படிக்கும்போதே தனது அம்மாவிடம் ‘நான் சூர்யாவுக்கு ஜோடியாக ஒருநாள் நடிப்பேன்’ என சொன்னாராம்.

keerthi

சொன்னது போலவே கோலிவுட்டில் நுழைந்து அதை நிரூபித்தும் காட்டினார். விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்தார். ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்தார். தனுஷுடன் தொடரி, விஷாலுடன் சண்டக்கோழி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

keerthi

அதேபோல், சிவகார்த்திகேயனோடு இவர் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்கள் எப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இருக்கிறது. ஒருபக்கம், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வருகிறார். அங்கு பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை எனில் இயக்குனர்கள் அழைப்பது கீர்த்தி சுரேஷைத்தான்.

keerthi

தமிழிலும் பெண் குயின், சாணி காயிதம் என சில படங்களில் அப்படி நடித்திருக்கிறார். நடிகர் விஜயுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால், அவரின் அம்மாம் இதை மறுத்தார். அவ்வப்போது அழகை விதவிதமாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

keerthi

அந்தவகையில், கை இல்லாத ஜாக்கெட் அணிந்து மஞ்சள் நிற புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனசை கலைத்திருக்கிறார். கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.