சிக்குன்னு நிக்குது பொண்ணு!.. ஸ்டன்னிங் லுக்கில் மனச கெடுக்கும் கீர்த்தி சுரேஷ்...
அம்மா நடிகை என்பதால் சிறு வயது முதலே நடிப்பின் மீது கீர்த்தி சுரேஷுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. இவரின் அம்மா மேனகா நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கேரளா சொந்த மாநிலம் என்றாலும் தமிழ் சினிமா மீதுதான் கீர்த்திக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்து வெளியான ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தின் மெகா வெற்றி அவரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற்றியது.
அதன்பின், ரெமோ, தொடரி என தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். மாகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்தார். ஒருபக்கம், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்து வருகிறார்.
அதோடு, அவ்வப்போது விதவிதமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.