ஹீரோவுக்குக்கூட கிடைக்காத அங்கீகாரம்.... அக்கட தேசத்தில் கெத்து காட்டும் நடிகை...!
திரையுலகில் டாப் மற்றும் மாஸ் நடிகர்களாக வலம் வரும் ரஜினி கமல் விஜய் அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் அவர்களது ரசிகர்கள் வானுயர கட் அவுட் வைப்பதையும் அதற்கு பாலாபிஷேகம் செய்வதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடிகைக்கும் இப்படி செய்ததில்லை.
அவ்வளவு ஏன் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவிற்கு கூட தற்போது வரை ரசிகர்கள் யாரும் கட் அவுட் வைத்து பார்த்ததில்லை. இப்படி உள்ள நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அவரது வெறித்தனமான ரசிகர்கள் வானுயர கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?
அட உண்மைதாங்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்று சர்காரு வாரி பட்டா படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முன்னதாக இப்படம் வெளியாவதை முன்னிட்டு மகேஷ்பாபு ரசிகர்கள் அவருக்கு நிறைய கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் வைத்து அசத்தி இருந்தார்கள்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு சுமார் 35 அடியில் கட் அவுட் வைத்து அவரது ரசிகர்கள் மாஸ் காட்டியுள்ளனர். இதுவரை மாஸ் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த அங்கீகாரம் முதல் முறையாக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்துள்ளது.
தமிழில் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் டல்லடித்து வருகிறது. ஆனால் தெலுங்கில் அவருக்கு கட் அவுட் வைக்கும் அளவிற்கு கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது