கடுங்கோபத்தில் கீர்த்தி...! இயக்குனர் கொடுத்த அந்த 'book' ஆல் வந்த விளைவு...!
இந்திய சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்தை பெற்று முன்னனி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் மாநடிகை என்றே கூறலாம். ஆரம்பத்தில் சுட்டி பொண்ணாக ஹீரோவுக்கு ஜோடியாக தன்னுடைய கதாபாத்திரங்களை நகர்த்திக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்திலயே அனைவரும் விரும்பும் நடிகையாக மாறினார். போக போக தனக்கு ஏற்ற கதையம்சம் பொருந்திய படங்களில் மட்டும் நடிக்க முன் வந்தார்.அதில் வெற்றியும் பெற்றார். இவர் நடிப்பில் வெளிவந்த ’மகாநதி’ படம் அப்படியே சாவித்திரி அம்மா திரும்பவும் மறுஜென்மம் எடுத்து வந்தது போல கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.
அந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். அடுத்து அடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த ‘சாணிக்காயிதம்’ படத்தில் நடித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படி பட்ட வித்தியாசமான அவர் கெரியரில் பண்ணாத கதாபாத்திரம் எப்படி நடித்தார் என அனைவரையும் யோசிக்க வைத்தது. படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த படத்தில் கீர்த்தி எந்நேரமும் கோபமாக பழிவாங்கும் நோக்கத்துடன் சுற்றித் திரியும் கதாபாத்திரம். ஆகையால் இயக்குனர் உண்மையில் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக கீர்த்தியிடம் சில ரேப்பிங் செய்திகள் பற்றிய புத்தகங்களை கொடுத்து படிக்க சொன்னாராம். அதை வாங்கி படித்து பார்த்ததும் உண்மையிலயே இப்படியெல்லாம் நடக்கிறதார் அருண்? எனக்கு படிக்க படிக்க கோபமாக வருகிறது என்று கூறினாராம். உடனே இயக்குனர் எங்களுக்கும் அதுதான் வேண்டும் அந்த கோபத்திலயே வாருங்கள் என்று கூறினாராம் அருண்.இதை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அருண் தெரிவித்தார்.