கௌதம் கார்த்திக் - மஞ்சிமா திருமணத்தால் மனம் நொந்த கீர்த்தி சுரேஷ்!.. அதிர்ச்சியை ஏற்படுத்திய ட்விட்டர் பதிவு!...
தமிழ் சினிமாவில் இன்று புதமணத்தம்பதிகளாக ஜொலிப்பவர்கள் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன். இவர்களுக்கு முன்னாடியே ரீல் ஜோடிகளாக இருந்து நட்சத்திர தம்பதிகளாக தமிழ் சினிமாவின் தொடக்கத்தில் இருந்தே நடக்கும் விஷயமாக கருதப்படுகிறது.
உதாரணமாக அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பாக்யராஜ்-பூர்ணிமா, டி.ராஜேந்திரன் - உஷா என இவர்களுக்கு மத்தியில் இன்று கௌதம் கார்த்திக்கும் மஞ்சிமாவும் சேர்ந்துள்ளனர். இவர்களது திருமணம் இன்று மிகவும் எளிமையான முறையில் உறவினர்களுடன் நடந்தது.
இதையும் படிங்க : கோமாளி இயக்குனருக்கு இரண்டு முறை ‘நோ’ சென்ன எஸ்.ஜே.சூர்யா… என்னவா இருக்கும்??
திருமணத்திற்கு முன்பே அழகான பிரஸ் மீட் வைத்து இந்த காதல் ஜோடி அவர்களின் திருமண அறிவிப்பை அறிவித்தது. அது மட்டுமில்லாமல் திருமணம் முடிந்த கையோடு நாங்களே எங்கள் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்வோம். அது வரை நீங்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.
அதன் படியே திருமணம் முடிந்த கையோடு புகைப்படங்களை கௌதம் கார்த்திக் அவருடைய இன்ஸ்டாவில் வெளியிட்டார். புகைப்படத்தில் பட்டு வேட்டி சட்டையுடன் கௌதம் கார்த்தில் சந்தனக் கலர் புடவையில் மிகவும் எளிமையாக மஞ்சிமா இருந்தனர். 2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் தோன்றிய இவர்களது நட்பு இன்று கல்யாணத்தில் கூடியுள்ளது.
இதையும் படிங்க : இந்த கதாபாத்திரத்தில் என்னை கிண்டல் செய்வாங்களா… அஜித்தே பயந்த சம்பவம்… என்ன படம் தெரியுமா?
ஆரம்பத்தில் காதல் இல்லை என்று கூறிவந்த இந்த தம்பதி அதன் பிறகு அரசல் புரசலாக தெரியவரவும் அவர்களே வெளிப்படுத்திவிட்டனர். இவர்களது திருமணத்திற்கு கௌதம் வாசுதேவ் மேனன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விக்ரம் பிரபு, போன்ற குறிப்பிட்ட சில நட்சத்திரங்களே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இப்படி ஒரு பக்கம் இனிமையான நிகழ்வு நடந்த சமயத்தில் இவர்களின் திருமணத்தால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அது ஒன்றுமில்லை. மஞ்சிமா கீர்த்தியை அழைக்கவில்லையாம். அதனால் இவர்களின் புகைப்படத்தோடு அந்த நிகழ்வில் நான் இருக்க ஆசைப்பட்டேன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.