
Cinema News
பாட்ச்சால்லாம் பழிக்காது….! தயாரிப்பாளர்களிடம் வேலையை காட்டிய இளம் நடிகை..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளில் நயன், சமந்தா, தமன்னா ஆகியோர் சினிமாவிற்குள் வந்து அவர்களது முக்கியத்துவத்தை அறிந்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகுதான் சம்பளத்தை கோடிகளில் அள்ளினர். அதுவரைக்கும் லட்சங்களில் தான் இருந்தது.
ஆனால் 18 வயதே நிரம்பிய இளம் நடிகை ஒருவர் வந்த கொஞ்ச நாளிலயே தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார். ஷியாம் சிங்கராய், பங்கராஹு, உப்பேன்னா போன்ற தெலுங்கு படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டி தான் தன் சம்பளத்தை 1.50 வரை கேட்டுள்ளார். தெலுங்கில் உப்பேன்னா படம் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி.
இதையும் படிங்கள்: டெய்லி இப்டி படம் போடு செல்லம்!…டிரெஸ்ஸ குறைச்சி கிளாமரை ஏத்திய லாஸ்லியா…
இவர் சுமார் 4 அல்லது 5 படங்களில் தான் நடித்திருப்பார்.அதுக்குள் தன் சம்பளத்தை கோடி வரை அதிகரித்துள்ளார். இதை அறிந்த மற்ற தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இவரை நெருங்கவே தயங்குகிறார்கள். தற்போது லிங்குசாமிஇயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் படத்தில் நடித்துள்ளார். அடுத்து பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்காக அவர் 1.50 கோடி கேட்டாராம். ஆனால் படக்குழுவோ அவர் கேட்டதை தர மறுத்து 75 லட்சமாக பேசியுள்ளது. ஒருவேளை சூர்யா போன்ற பெரிய நடிகருடன் நடிப்பதால் தன் மார்க்கெட்டை அவரே உயர்த்தினாரோ இல்லையோ? எதுமே படம் வந்ததுக்கு அப்புறம் தானே தெரியும் அவரின் மார்க்கெட் என்ன என்பது.