அப்பவே ஷூட்டிங் மேல ரொம்ப ஆர்வம் – சின்ன வயசுலையே படம் நடிச்ச கீர்த்தி சுரேஷ்..

Published on: March 26, 2023
keerthy suresh
---Advertisement---

தமிழில் பிரபலமாக பேசப்படும் நடிகைகளில் முக்கியமானவர் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. தற்சமயம் பான் இந்தியா திரைப்படமான தசரா திரைப்படத்தில் சாதரண கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷிற்கு பெரும் வரவேற்பை பெற்று தந்த படம் ரஜினி முருகன். அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்றார். தொடரி திரைப்படம் வந்தபோது அதிகமான விமர்சனத்துக்கு உள்ளானார் கீர்த்தி சுரேஷ்.

keerthy1_cine

அதற்கு பிறகு நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். கீர்த்தி சுரேஷின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக நடிகையர் திலகம் இருந்தது. இடையில் பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷிற்கு காதல் என புரளிகள் வலம் வந்தன.

சிறு வயதிலேயே கிடைத்த வாய்ப்பு:

பிறகு அவரது பெற்றோர்கள் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர். கீர்த்தியின் அம்மா மேனகா ஒரு பேட்டியில் கூறும்போது “சின்ன வயது முதலே கீர்த்தி சுரேஷ்க்கு சினிமாவின் மீது ஆர்வம் இருந்தது. படப்பிடிப்புகளுக்கு வந்து அவர் படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பார்.

பிறகு நாங்கள் தயாரித்த குபேரன் என்ற திரைப்படத்தில் அவரை சிறுமி கதாபாத்திரமாக நடிக்க வைத்தோம். அந்த சமயத்தில் படப்பிடிப்பு நாட்களில் ஊட்டியில் காலை ஐந்து மணிக்கே எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு தயார் ஆகி விடுவார் கீர்த்தி சுரேஷ்.

அந்த அளவிற்கு அப்போதே அவர் நடிப்பின் மீது ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் இப்போதெல்லாம் அவர் வீட்டிற்கே வருவதில்லை. படப்பிடிப்பு காரணமாக ஊர் ஊராக சுற்றிக்கொண்டே இருக்கிறார். பண்டிகை நாட்களில் கூட அவரை பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.