Keerthy Suresh: என்ன ஒரு ரொமான்டிக் pic? காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்

by Rohini |
keerthy
X

keerthy

Keerthy Suresh: தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். விஜய் ,சூர்யா ,விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த கீர்த்தி சுரேஷ் இப்போது பாலிவுட்டில் தன்னுடைய அறிமுகத்தை பதிவு செய்து இருக்கிறார் .அட்லி தயாரிப்பில் கலீஸ் இயக்கத்தில் பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இந்த படத்தின் பாடல் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. பாலிவுட்டில் இதுதான் அவருடைய முதல் படம் என்றாலும் அவருடைய தோற்றம் முன்பை இருந்ததைப் போல முற்றிலுமாக மாறியிருக்கிறார். ஒரு பாலிவுட் நடிகையாகவே மாறி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ் .

இதையும் படிங்க: Jyothika: கை கொடுக்க ஓடி வந்த ரசிகை.. ஜோதிகாவின் ரியாக்‌ஷன்! திருப்பதியில் நடந்த சம்பவம்

தனது நீண்ட கால நண்பரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்ய போகிறார் என கடந்த மாதம் செய்தி வெளியானது. ஆனால் கீர்த்தி சுரேஷ்சிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இவர்களுடைய திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது .இதற்கிடையில் கீர்த்தி தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி என்பவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய காதலை உறுதி செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அது மட்டுமல்ல 15 வருடம் மற்றும் நாட்களை எண்ணி கொண்டிருப்பதாகவும் ஒரு கேப்ஷனை போட்டு தன்னுடைய ஆசையை தெளிவுபடுத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த ஒரு புகைப்படம் தான் இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. இதற்கு முன்பு வரை கீர்த்தி சுரேஷை பல நடிகர்களுடன் இணைத்து வைத்து செய்தி வெளியானது.

keerthy1

keerthy1

இதையும் படிங்க: விஜய் பண்றது கருவாட்டு சாம்பாருனா!.. நீங்க பண்றதுக்கு பேர் என்ன?!.. தளபதிக்காக சீமானிடம் பொங்கிய பிரபலம்!..

ஆனால் அது எதற்கும் கீர்த்தி சுரேஷிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் வராத நிலையில் இன்று அவரே தன் காதலை உறுதிப்படுத்தியிருக்கிறார். சிறு வயதில் இருந்தே ஆண்டனியும் கீர்த்தி சுரேஷும் இணைந்து பழகி வந்திருக்கின்றனர். நண்பர்களாக இருந்த அவர்கள் இப்போது வாழ்க்கையில் தம்பதிகளாக ஒன்று சேர இருக்கின்றனர்.

Next Story