Entertainment News
எல்லாம் மும்பை செய்த மாயம்!.. ரகு தாத்தா ஆடியோ லாஞ்சுக்கு ஓப்பன் டிரெஸ்ஸில் வந்த கீர்த்தி சுரேஷ்!..
பாலிவுட் போனதில் இருந்தே கீர்த்தி சுரேஷ் செம பாலிஷ் ஆகிவிட்டார் என்கின்றனர். ரகு தாத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று ஹயாத் ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது. அதில், கலந்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் ஒட்டுமொத்த முதுகும் தெரியும் படி வந்து அரங்கையே அதிர வைத்தார்.
அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பல வருடங்களாக இந்தியில் நடிக்க வேண்டும் என தவமாய் தவம் கிடந்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு பேபி ஜான் படத்தின் மூலம் அந்த வாய்ப்புக் கிடைத்தது.
இதையும் படிங்க: எங்க அப்பா ஒரு மாதிரியான ஆளுங்க… Round table-அ தான் இருப்பாரு… ராதாரவி சொன்ன சுவாரஸ்யம்…
அதற்கு முன்னதாக இந்தி தெரியாது போடா என்கிற கான்செப்ட்டில் உருவான ரகு தாத்தா படம் கடந்த ஆண்டே வெலியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு சம்மருக்கு வெளியாகும் என்றும் அறிவித்தனர்.
ஆனால், அதன் பின்னர் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்ட நிலையில், தற்போது விரைவில் அந்த படம் வெளியாக உள்ள நிலையில், அதன் ஆடியோ லாஞ்சுக்காக சென்னைக்கு வந்த கீர்த்தி சுரேஷ் இப்படியொரு கவர்ச்சி டிரெஸ்ஸை அணிந்துக் கொண்டு வருவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதையும் படிங்க: விவேக் மாதிரி டூப் போட்ட நடிகர் ஷங்கரிடம் எழுப்பிய கேள்வி… பதிலைக் கேட்டதும் பொட்டிப் பாம்பாயிட்டாரே..!
ஜாக்கெட்டே அணியாமல் சேலை கட்டிக் கொண்டு வந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு அவரது உடை கிளாமரின் உச்சமாக இருந்த நிலையில், நிகழ்ச்சியை யாருமே கவனிக்கவோ கண்டுக்கொள்ளவோ இல்லை. அனைவரின் கண்களும் கீர்த்தி சுரேஷின் முதுகின் மேலும், சைடு லுக் போஸின் மீதும் தான் இருந்தது.
கேமரா மேன்களும் வளைத்து வளைத்து எடுத்த போட்டோக்களை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். ரகு தாத்தா படத்தைத் தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: தக் லைஃப் படம் இப்படித்தான் வந்துருக்காம்…! எடுக்கப்பட்ட வரையில் பார்த்ததும் தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்..!