ஓ இதுதான் அழகுல மயங்குறதா!.. க்யூட் லுக்கில் வசியம் செய்யும் கீர்த்தி சுரேஷ்!…
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக கீர்த்தி சுரேஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதற்கு உதாரணமாக மகாநடி படம்,தசரா படம், சாணிக்காயிதம் படமும் என ஒரு சில படங்களை உதாரணமாக கூறலாம். அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வரும் கீர்த்தி பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
எந்த கதாபாத்திரமானாலும் கதைக்கு முக்கியத்துவம் என்றால் துணிந்து நடிக்க கூடிய நடிகையாக வலம் வருகிறார். இவரின் பல வீடியோக்கள் புகைப்படங்கள் என இணையத்தை சமீபகாலமாக அலங்கரித்து வருகின்றன.
பல ரீல்ஸ் வீடியோக்களையும் இணையத்தில் உலா விடுகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி அவ்வப்போது போட்டோ சூட்டுகள் நடத்தி அழகிய புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அழகிய மஞ்சள் நிற ஆடையில் அந்த செவ்வானமே வெட்கப்படும் அளவிற்கு அழகான போஸ்களில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறிக்க விட்டு வருகின்றனர்.