
Cinema News
சான்ஸ் கொடுக்காத காண்டுதானா!.. விஜய்யை மயக்க இந்த வருஷம் அப்படி செய்யலையே கீர்த்தி சுரேஷ்?
மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அடுத்து எப்படியாவது மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்து விட வேண்டும் என பெருமுயற்சி செய்த கீர்த்தி சுரேஷுக்கு கடைசியில் மிஞ்சியது பல்பு மட்டும் தான் என்கின்றனர்.
நடிகர் விஜய்யுடன் இணைந்து பைரவா, சர்கார் என இரு படங்களில் ஜோடி போட்டு நடித்தார் கீர்த்தி சுரேஷ். இருவரது ஜோடி பொருத்தமும் கொஞ்சம் கூட செட்டாகவில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் நடித்ததால் தான் சர்கார் படம் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கவில்லை என்றும் பேச்சுக்கள் கிளம்பின.
அத்துடன் பாலிவுட் படத்துக்காக உடல் எடையை குறைத்து ஓடாக தேய்ந்து போன கீர்த்தி சுரேஷுக்கு அதற்கு மேல் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பே கிடைக்காத நிலை ஆகி விட்டது.
ஆனாலும், எப்படியோ மேட்ச் செய்து மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக நிச்சயம் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து விட வேண்டும் என நினைத்து தான் அவரை கோலிவுட்டில் இருந்து டோலிவுட்டில் ஒரு படம் பண்ண தயாரிப்பாளர்களையும், இயக்குநரையும் ஏற்பாடு செய்தார் எனக் கூறப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷலாக வயலின் எல்லாம் வாசித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோவும் வெளியிட்டு இருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால், கடைசியில் அவர் நினைத்தது நடக்கவில்லை.
ராஷ்மிகா மந்தனா மற்றும் மெஹ்ரின் பிர்சடா என இரு நடிகைகளுக்கு வாரிசு படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார் விஜய். இரண்டாவது நாயகியாக கூட கீர்த்தி சுரேஷை அவர் கன்சிடர் பண்ணவில்லையாம்.
லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்து விஜய் இணைந்து நடிக்கவுள்ள தளபதி 67 படத்திலும் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். அந்த படத்திலும் தனக்கு வாய்ப்பில்லை என்பது தெரிந்தும் இந்த பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் வீடியோ தான் ஒரு கேடா என எதையுமே போடாமல் சும்மா ஒரு போஸ்ட் மட்டும் போட்டு விஷ் பண்ணி உள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.