கீர்த்தியின் காதலர் இவர்தான்!.. விஜய் விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் குடும்பம்..
சமீபகாலமாக விஜயை பற்றி சில தவறான வதந்திகள் தமிழ் சினிமாவிலும் சரி மக்கள் மத்தியிலும் உலாவிக் கொண்டு வருகிறது. அதிலும் நேற்று வெளியான ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கனவிலும் நினைக்க முடியாத அந்த சம்பவம் நேற்று இணையம் முழுவதும் பற்றி எரிந்தது.
அதாவது விஜய் கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதாகவும் அதனால் சங்கீதாவை விஜய் விரைவில் விவகாரத்து செய்ய இருப்பதாகவும் தேவையில்லாத சில வதந்திகள் பரவியது. இதன் காரணமாகவே வாரிசு பட இசை வெளியீடு விழாவில் சங்கீதா கலந்து கொள்ளவில்லை என்று வதந்திகளை கிளப்பினர்.
இதையும் படிங்க : விஜயின் கெரியரிலேயே உச்சக்கட்ட வியாபாரம்!.. தளபதி – 67 சாட்டிலைட் உரிமத்தை அதிக தொகைக்கு வலைச்சுப் போட்ட நிறுவனம்!..
விஜய் கீர்த்தி சுரேஷ் இருவரும் முதன் முதலில் பைரவா படத்தின் மூலம் இணைந்தனர். அதன் பின் இருவரும் இணைந்து சர்க்கார் படத்தில் ஜோடி சேர்ந்தனர். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும் இந்த பழக்கம் தெரிந்து விஜயின் மனைவி அவரை கண்டித்ததாகவும் பல வதந்திகள் பரவின.
மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இந்த செய்தி தான் நேற்று ரசிகர்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் குடும்பம் வாய் திறந்துள்ளனர்.
அதாவது கீர்த்தி பள்ளியில் படிக்கும் போது இருந்தே ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரைத் தான் கீர்த்தி திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கின்றனராம். கீர்த்தி காதலிக்கும் நபர் கேரளாவில் ரிஷார்ட் வைத்திருக்கிறாராம். மேலும் அவர்களது திருமணத்தை எங்கள் இருவர் குடும்பமும் சேர்ந்துதான் நடத்த உள்ளோம் என்றும் கூறியிருக்கின்றனர்.
மேலும் கீர்த்தியும் அவரது காதலரை ஒரு சமயம் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் எனவும் காதலரின் பிறந்த நாளன்று விஜயும் வந்திருந்தார் என்றும் கூறியிருக்கின்றனர். மேலும் இவர்களது திருமணத்தை 4 வருடங்கள் கழித்து நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்களாம். இந்த செய்தியை வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.