
Cinema News
கீர்த்தி சுரேஷ் கையை பிடித்து இழுத்த ஐஸ்க்ரீம் கடைக்காரர்!.. அச்சச்சோ.. அப்புறம் என்ன ஆச்சு?..
நடிகை கீர்த்தி சுரேஷ் டர்கீஷ் ஐஸ்க்ரீம் கடையில் ஃபன் பண்ணும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கடைக்காரருக்கே கீர்த்தி டஃப் கொடுப்பதை ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் கீதாஞ்சலி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும், தமிழில் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்திருந்தார். அதை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ,பைரவா, தானா சேந்த கூட்டம், சாமி 2 என பல படங்களில் முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் சாமி2 படத்தில் ஒரு பாடல் கூட பாடியுள்ளார்.

#image_title
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மகாநதி என்று படமாக்கியிருந்தனர். அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்க மட்டுமல்ல அவரைப் போலவே வாழ்ந்தும் இருப்பார். அதை தொடர்ந்து அவரின் அந்த நடிப்பை வேறு எந்த படங்களில் பார்க்க முடியாததற்கு காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் தான்.
மேலும், கடந்த ஆண்டு கீர்த்தி தான் 15 வருடங்களாக காதலித்து வந்த அந்தோணி தட்டில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தன் கணவருடன் தலை பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை கூட ஷேர் செய்திருந்தார். அந்நிகழ்வில் தளபதி விஜய்யும் கலந்துக்கொண்டது பரபரப்பை கிளப்பியது.
கீர்த்தி கடைசியாக நடித்திருந்த பேபி ஜான், ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. தற்போது, அவர் கணேஷ் ராஜ் இயக்கத்தில் கன்னிவெடி, சந்துரு இயக்கத்தில் ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டர்கீஷ் ஐஸ்கிரீம் கடையில் அந்த கடைக்காரருக்கு பணம் கொடுக்கும் போது அவர் ஐச்கிரீம் கொடுக்காமல் விளையாடியது போலவே கீர்த்தியும் பணம் கொடுக்காமல் விளையாடி ஃபன் பன்னும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மேக்கப் போடலனா பாலிவுட் நடிகைகல வீட அழகா இருக்கிங்க, கியுட், லவ் யூ என கமெண்டுகளை அள்ளி குவித்து வருகின்றனர். அந்த கடைக்காரர் கீர்த்தி சுரேஷ் கையை பிடித்து இழுத்ததை பார்த்த ரசிகர்கள் அந்த நபரை கெட்ட வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.