எதுக்கும் தயார்...! கீர்த்தி சுரேஷின் அதிரடியான முடிவை பார்த்து ரசிகர்கள் வருத்தம்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஆரம்ப காலங்களில் சினிமாவில் நுழையும் போது கவர்ச்சிக்கு ஒரு எல்லைக் கோடு வகுத்துக் கொண்டு தான் வந்தார்.
அப்படி நடித்த படங்கள் எல்லாமே பெரிய ஹிட கொடுத்தது. மக்கள் மத்தியிலும் நிலைத்து நின்றார். அந்த கால நடிகைகளான நதியா, ரேவதி போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினார் ரசிகர்களிடம். நதியா துளி கூட கவர்ச்சி இல்லாமல் சினிமாவில் சாதித்து காட்டிய மாபெரும் பெண்மணி. அதே போல் தான் கீர்த்தியும் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக படவாய்ப்புகள் குறைந்ததாலும் புதுமுகங்கள் வரவாலும் கீர்த்தி பயந்தாரோ இல்லையா என தெரியவில்லை. அதிரடியான கவர்ச்சியில் இறங்கினார். மேலும் சமூக வலைதளங்களில் அதிகளவிலான ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கும் கீர்த்தி தன்னுடைய அளவில்லாத கவர்ச்சி புகைப்படங்களை பகிர தொடங்கினார்.
இதை பார்த்த ரசிகர்கள் முகம் சுழிக்க ஆரம்பித்தனர். கீர்த்தியை சுடிதார் தாவணியில் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு கவர்ச்சியில் பார்க்க அவர்கள் விரும்பவில்லை, இதை தங்களுடைய கமெண்டுகள் மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர். முன்பு இருந்த மார்க்கெட் கீர்த்திக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்றே தான் கூற வேண்டும். மேலும் பாலிவுட் ரேஞ்சுக்கு தன்னுடைய அழகான மேனியை குறைத்து பார்ப்பதற்கும் ஏதோ மாதிரி தோற்றமளித்தார். இதை ரசிகர்கள் சற்றும் ஏற்கவில்லை. படவாய்ப்புக்காக கவர்ச்சியை காட்டி இப்படி புகைப்படங்களை பகிர்வது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என சமூக வலைதளங்களில் செய்தியாக வைரலாகி வருகிறது.