கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யார் தெரியுமா.? வெளியான சூப்பர் சீக்ரெட்....

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் கீர்த்தி சுரேஷ் ஆரம்ப காலகட்டத்தை போல இப்போது, பெரிய படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு பெரிதாக வாய்ப்பும் கிடைக்கவில்லை கடைசியாக மகேஷ் பாபுவின் ‘சர்க்காரு வாரி பட்டா ‘ மற்றும் மலையாளப் படமான ‘வாஷி’ ஆகியவற்றில் நடித்திருந்தார்.
ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இதனையடுத்து கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 29 வயதான கீர்த்தி சுரேஷ் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
இதையும் படியுங்களேன்- நீங்க பொறுமையா வேலை பாருங்க…கடுப்பாகி பாலாவை கழட்டிவிட்ட சூர்யா.. வணங்கான் கதி?…
இதனால் கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகம், இந்த திருமணத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்து விட்டாராம். கீர்த்தி சுரேஷிற்கு அரசியலில் உள்ள தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கபடுகிறது.

keerthidp
ஆனால், சினிமாவில் இருக்கும் நடிகைகளின் திருமண வதந்தி குறித்த சில தகவல்அவ்வப்போது பரவுவது வழக்கமான ஒரு விஷயம் தான். இதனால் இப்போது கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்தி வைரலாகி வரும் நிலையில், இது குறித்த கீர்த்தி சுரேஷ் விரைவில் அறிவித்தல் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும்.