எல்லாம் சரிதான்... அந்த பேண்ட்தான் மிஸ்ஸிங்: கீர்த்தி சுரேஷின் வைரலாகும் வீடியோ !
முன்னாள் நடிகை மேனகாவின் மகளும் நடிகையுமான கீர்த்தி சுரேஷ் மலையாளப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் இவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருந்த 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
ஆனால், ரஜினி முருகன் படத்தின் மூலம் அனைவராலும் பரவலாக அறியப்பட்டார். இப்படத்தின் வெற்றியையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரெமோ படத்தில் நடித்திருந்தார். இப்படமும் வெற்றிபெற்றதால் இவரது மார்க்கெட் ஏறியது.
இதனிடையே தனுஷுடன் தொடரி, விஜய்யுடன் பைரவா, சர்க்கார் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தமிழைப்போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக இவர் நடித்து வெளியான 'அண்ணாத்த' படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மைக்கில் ஜாக்சன் ஸ்டைலில் தொப்பியை மாட்டி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதில் கமெண்ட் செய்துள்ள ரசிகர் ஒருவர் எல்லாம் சரிதான் ஆனால் பேண்ட்தான் போட மறந்துட்டீங்க போல என்று கமெண்ட் செய்துள்ளார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார். தமிழில் செல்வராகவனுடன் சாணி காகிதம் படத்திலும் நடித்து வருகிறார்.