என்னது ப்ரோவா!.. கீர்த்தி சுரேஷ் எப்போ பையனா மாறினாரு.. இப்படி ஃபயர் விடுறாங்களே மாளவிகா மோகனன்!..

சென்னையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஈசிஆர் பீச்சில் பெரிய ஜீப்பை எடுத்துக் கொண்டு டாம் பாய் மாதிரி வண்டி ஓட்டி மெர்சல் காட்டிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ஏகப்பட்ட ஹீரோயின்களையே ஃபயர் விட வைத்துள்ளார்.

கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம், சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் என ஆரம்பத்தில் இளம் ஹீரோக்களுடன் சாதாரண புது வரவு நடிகையாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் எப்போ நடிகையர் திலகம் படம் பண்ணி தேசிய விருதை வென்றாரோ அப்போதிலிருந்தே அவரது ரேஞ்சே மாறிவிட்டது.

இதையும் படிங்க: ஒரு பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சவன்தானே நீ? நிக்‌ஷனை பார்த்து பிரதீப் சொன்னதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தமா?

பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என சமந்தா, தமன்னா, நயன்தாரா மாதிரி கீர்த்தி சுரேஷும் முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் தெறி இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.

தமிழில் விஜய்யின் அட்மின் ஜெகதீஷ் தயாரிப்பில் உருவாகி வரும் ரிவால்வர் ரீட்டா மற்றும் ரகு தாத்தா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு சைடா காட்டி உசுர வாங்கும் தர்ஷா குப்தா!. இன்னைக்கு நைட்டுக்கு இது போதும்!..

இந்த ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படத்திலேயே போல்டான டாம் பாய் கதாபாத்திரத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் பீச் மணலில் ஆஃப் ரோடு சவாரி செய்கிறேன் என அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து நடிகை மாளவிகா மோகனன் ப்ரோ என கமெண்ட் போட்டு ஃபயர் விட்டுள்ளார்.

மேலும், நிவேதா பெத்துராஜ், லக்‌ஷ்மி மேனன், ரக்‌ஷன் விஜே உள்ளிட்ட பலரும் கீர்த்தி சுரேஷின் வீடியோவுக்கு ஃபயர் விட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/CzRG-NuJlfO/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

 

Related Articles

Next Story