வரிசையா படங்களை முடித்துத் தள்ளும் கீர்த்தி சுரேஷ்!.. விஜய் அட்மின் படமும் ரெடியாகிடுச்சாம்!..

நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து அதனை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தும் வருகிறார். தமிழில் அவர் நடிப்பில் ரகு தாத்தா படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், இன்னமும் அந்த படம் வெளியாகவில்லை.

அடுத்ததாக அட்லி தயாரிப்பில் பாலிவுட்டில் உருவாகி வரும் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் மட்டும் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த நிலையில், அவரது காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் முடிக்கப்பட்டு கேக் வெட்டி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கில்லி ரீ ரிலீஸ் குவித்த கலெக்‌ஷன்!.. தளபதியை சந்தித்து பிரபல தியேட்டர் ஓனர் பார்த்த வேலை!..

கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் பகத் ஃபாசில் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

இந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் 108 படத்தில் போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக ஏற்று நடித்து கடைசிவரை மாஸ் காட்டியிருந்தார். ஆனால், சில குறைகள் காரணமாக அந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இதையும் படிங்க: ‘கூலி’ என்னோட டைட்டில்! லோகேஷ் என்னிடம் எதுமே கேக்கல.. இதோ ஸ்டார்ட் ஆயிடுச்சே பிரச்சினை

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் விஜய்யின் அட்மின் எனக் கூறப்படும் ஜெகதீஷ் ப்ளீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் படப்பிடிப்பை தற்போது முடித்துள்ள கீர்த்தி சுரேஷ் இதற்கு முன் எந்த ஒரு படத்திலும் இந்த அளவுக்கு சிரித்து ரசித்து நடித்ததில்லை. அந்த அளவுக்கு காமெடியாகவும் ஃபன்னாகவும் படப்பிடிப்பு சென்றது. அதே மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் நிச்சயம் ரசிகர்களுக்கு கொடுப்போம் எனக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு வரிசையாக அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. அதில் எத்தனை படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறும் என்பதை காத்திருந்து காண்போம்.

 

Related Articles

Next Story